பொள்ளாச்சி அருகே, கேரள மாநில கழிவுகளை கொட்ட முயன்ற லாரிகள் சிறைபிடிப்பு!

 

பொள்ளாச்சி அருகே, கேரள மாநில கழிவுகளை கொட்ட முயன்ற லாரிகள் சிறைபிடிப்பு!

கோவை

பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் கேரள மாநில கழிவுகளை கொட்ட முயன்ற 3 லாரிகளை, பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தமிழக -கேரள எல்லை அருகே செமனாம்பதி கிராமம் உள்ளது. இங்குள்ள தனியார் தோட்டத்தில், அதிகாலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் கொட்டப்படுவதாக, அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.

பொள்ளாச்சி அருகே, கேரள மாநில கழிவுகளை கொட்ட முயன்ற லாரிகள் சிறைபிடிப்பு!

தகவலின் பேரில், செமனாம்பதி அடுத்த இரட்டைமடை பகுதியில் சென்று பார்த்தபோது , கேரளாவை சேர்ந்த ஆண்டனி ஜோஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குழி தோண்டி குப்பைகள் கொட்டப்படுவது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குப்பைகளை ஏற்றிவந்த 3 லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், லாரியில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று, குப்பை ஏற்றிவந்த லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தோட்ட உரிமையாளர் ஆண்டனி ஜோஸை தேடி வருகின்றனர்.