‘செயற்கைக்கோளில் மோடி படம், பகவத் கீதை’ : விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி- 51!

 

‘செயற்கைக்கோளில் மோடி படம், பகவத் கீதை’ : விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி- 51!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 8:54 மணிக்கு தொடங்கியது. பிரேசில் நாட்டில் காடுகள் அழிப்பதை தடுக்கும் பொருட்டு, அதனை கண்காணிக்க 637 கிலோ எடை கொண்ட பிரேசிலின் அமேசானியா- 1 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி- 51 உடன் அனுப்பப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகளாம்.

‘செயற்கைக்கோளில் மோடி படம், பகவத் கீதை’ : விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி- 51!

அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும், சென்னை மற்றும் கோவை கல்லூரி மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அதோடு இஸ்ரோவின் சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் சதீஷ் சேட் உள்ளிட்ட ஐந்து செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டுக்காக சிந்து நேத்ரா செயற்கைக் கோள் அனுப்பப்படுவதாகவும் ராக்கெட்டின் முதற்கட்ட செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சதீஷ் தவான் சேட் செயற்கைக் கோளில் பிரதமர் நரேந்திர மோடி படமும், பகவத் கீதையின் வாசகம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.