நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் – உயர் நீதிமன்றம் கருத்து!

 

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் – உயர் நீதிமன்றம் கருத்து!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு என்பது பல ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டா கனியாக மாறியுள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பலர் தங்கள் உயிரை மாய்த்து கொல்கின்றனர். அப்படி தான் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 மாணவர்கள் நீட் அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் – உயர் நீதிமன்றம் கருத்து!
நீட்

இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலையை தடுக்க அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.

நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் – உயர் நீதிமன்றம் கருத்து!

இந்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, “நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும்.நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் குடும்பத்திற்கு அரசு, அரசியல் கட்சிகள், நிதியுதவி, வேலை தருவதாக கூறுவது தற்கொலையை ஊக்குவிக்கும். இதுபோன்ற செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்” என்று கூறியதுடன் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் வழக்கறிஞர் சூர்ய பிரகாசத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.