இதய நோய் வாய்ப்பை குறைக்கும் பேரீச்சை!

 

இதய நோய் வாய்ப்பை குறைக்கும் பேரீச்சை!

உலர் பழங்களில் பேரீச்சைக்கு முக்கிய இடம் உண்டு. தினமும் இரண்டு, மூன்று சாப்பிட்டுவந்தால் உடலில் இரும்புச் சத்து குறைபாடு முதல் இதய நோய் வரை பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதய நோய் வாய்ப்பை குறைக்கும் பேரீச்சை!

1. இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது

பேரீச்சையில் கரையக் கூடிய நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இது எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது. நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை உடல் கிரகிக்க அனுமதிக்காமல் தடுக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதன் |மூலம் இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

2. புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது

பேரீச்சையில் carotenoids, polyphenols, மற்றும் anthocyaninsஎன்ற ஆற்றல் மிக்க ஆன்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை பல வகையான புற்றுநோய்கள் வருவதைத் தடுக்கிறது. மேலும் நார்ச்சத்து அதிகம் என்பதால் வயிறு இரைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் இது குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3. சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது

இதில் உள்ள நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள சில நுண் ஊட்டச்சத்துக்கள் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதன் சர்க்கரை நோய் பாதிப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள ஃபிளவனாய்ட்ஸ், பீனால்ஸ் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது எப்படி நிகழ்கிறது என்பது தொடர்பான ஆய்வுகள் தொடர்கின்றன.

4. ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்குகிறது

பேரீச்சையில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி, இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. தினசரி 3-4 பேரீச்சம் பழம் சாப்பிடுவது இந்த ஊட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் நம் உடலுக்கு ஓரளவுக்காவது கிடைப்பதை உறுதி செய்கிறது.

5. உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது

உடல் எடை குறைவாக உள்ளவர்கள், எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சற்று அதிகமாகவே பேரீச்சம் பழம் சாப்பிடலாம். 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரி உள்ளது. எனவே, தினமும் அதிகம் சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்கும்.