கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு போராட்டம்!

 

கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு போராட்டம்!

சேலத்தில் திருக்கோவில்களை திறக்க வலியுறுத்தி, இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரானா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு போராட்டம்!
இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கோவில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அனைத்தும் சிறு,குறு தொழில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பி வரும் நிலையில் கோயில்களில் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் அவற்றை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். குறிப்பாக சேலம் மாநகர பகுதியில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் இந்து முன்னணி சார்பில் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் முன்பு இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் தோப்புக்கரணம் போட்டு சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.