சூர்யா படப் பாடலுக்கு எதிர்ப்பு – சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்!

 

சூர்யா படப் பாடலுக்கு எதிர்ப்பு – சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்!

சூரரைப் போற்று படத்தின் பாடலுக்கு எதிராக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூர்யா படப் பாடலுக்கு எதிர்ப்பு – சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்!

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

சூர்யா படப் பாடலுக்கு எதிர்ப்பு – சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்!

இந்நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று பட பாடலுக்கு எதிராக புகார் வந்தால் சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுங்கள் உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். கார்த்திக் என்பவர் தொடர்ந்த வழக்கில், சூர்யா பட பாடல் விவகாரம் குறித்து புகார் வந்தால் சட்டப்படி பரிசீலித்து உரிய முடிவு எடுக்கலாம் என்று தருமபுரி எஸ்பிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள ‘மண் உருண்ட மேல’ பாடல் வரிகள் சாதி பிரச்சனையை தூண்டும் விதமாக உள்ளது என மனுதாரர் கூறியிருந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.