ஆன்லைன் வகுப்புக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

 

ஆன்லைன் வகுப்புக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. பள்ளிகள் எப்போது திறக்கம் என தெரியாததால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆன்லைன் வகுப்புகளால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆன்லைன் வகுப்புக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆன்லைன் வகுப்பினால் ஏற்படும் மன உளைச்சலாலும், பாடம் படிக்க செல்போன் இல்லாததாலும் தமிழகத்தில் ஏராளமான குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்புக்கு எதிராக மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் வகுப்பால் தேனி மாவட்டத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.