ஈரோட்டில் எல்.முருகன் உள்ளிட்ட 1330 பேர் மீது வழக்குப்பதிவு

 

ஈரோட்டில் எல்.முருகன் உள்ளிட்ட 1330 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு

ஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முயன்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட ஆயிரத்து 330 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு மாவட்ட பாஜக சார்பில் நேற்று வேல் யாத்திரை நடைபெற்றது. இதனையொட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஈரோடு சென்னிமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சம்பத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதனை தொடர்ந்து தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற முருகன் உள்ளிட்ட ஆயிரத்து 330 பாஜகவினரை, மாவட்ட எஸ்.பி தங்கதுரை தலைமையில் போலீசார் கைதுசெய்தனர்.

ஈரோட்டில் எல்.முருகன் உள்ளிட்ட 1330 பேர் மீது வழக்குப்பதிவு

தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள், மாலை விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஈரோடு வீரப்பன் சத்திரம் காவல் நிலைய போலீசார் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக எல்.முருகன் உள்ளிட்ட ஆயிரத்து 330 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 400-க்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவர்