பேராசிரியர் கல்விமணிக்கு கொரோனா தொற்று உறுதி

 

பேராசிரியர் கல்விமணிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை அச்சுறுதிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக  தீராத பிரச்னையாக இருக்கிறது கொரோனா.

இந்த நோய்த் தொற்றுவது நாள்தோறும் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை. இன்றைய தேதி வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பதே கவலை அளிக்கும் செய்தி.

பல நாட்டு விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயன்று வருகின்றனர். பல கட்ட சோதனைகளில் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நம்புவோம்.

பேராசிரியர் கல்விமணிக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்குக் கொரோனா நோய்த் தொற்றாகி குணம் அடைந்துவருகிறார்கள். சிலர் இயல்பு வாழ்க்கைக்கும் அன்றாட அலுவல் பணிகளுக்குத் திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் பேராசிரியர் கல்விமணிக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி, முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இருளர் சமூகத்தின் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருபவர் பேராசியர் கல்விமணி. அவருக்குக் கொரோனா உறுதியான செய்தி அவரின் களச்செயற்பாட்டால் பயன்பெற்ற மக்களுக்கு பெரும் துயரத்தை அளித்தது.

பேராசிரியர் கல்விமணிக்கு கொரோனா தொற்று உறுதி

திண்டிவனம் தாய்த்தமிழ் பள்ளியையும் நடத்தி வருகிறார் பேராசிரியர் கல்விமணி. சமீபத்தில் மாணவர்களின் வீட்டுக்கே சென்ற நுண்வகுப்பறைகள் உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

கல்விமணிக்குச் சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் நவீன் தனது முகநூல் பக்கத்தில், ‘முண்டியம்பாக்கம் அரசு மரு்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபா. கல்விமணி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். இன்று காலை அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தேன்.

லேசான ஜுரம் மற்றும் சளி மட்டும் உள்ளது. மருத்துவர்களும் செவிலியர்களும் செவ்வென கடமையை செய்கிறார்கள். சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எந்த “தீவிர சிகிச்சையும்” அவருக்கு அவசியம் இல்லை.

அவருடைய vital மற்றும் Blood reports normal ஆக உள்ளது. தீவிர கண்காணிப்பில் உள்ளார். சீக்கிரமே குணமடைந்து வருவார்.’ என்று நம்பிக்கை தெரிவிக்கும் பதிவை எழுதியுள்ளார்.