தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம்!

 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது. அதன்படி தேர்தலை டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம்!

இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. ஆனால் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம்!

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூலை 30 ஆம் தேதிக்குள் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .