முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னையா? – இதோ 5 தீர்வுகள்!

 

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னையா? – இதோ 5 தீர்வுகள்!

’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ இந்தப் பழமொழியைச் சொன்னாலும் சொன்னார்கள். முகத்தை வைத்தே பலரும் ஜோசியம் பார்க்க ஆரம்பித்து விட்டனர். நாம் இயல்பாக முகத்தை விட்டிருந்தாலும் பலர், ’என்ன இது இப்படி எண்ணெய் வடியுது?’ என்று கேட்கிறார்கள். எனவே முகத்தில் எண்ணெய் வழிவதற்கு தீர்வு சில எளிய வழிகள்.

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னையா? – இதோ 5 தீர்வுகள்!

ஒன்று : நலம் தரும் வேப்பிலை. வேப்பிலை பல நோய்களுக்கு மாமருந்து. அதை முகத்தில் எண்ணெய் வழிவதற்கும் பயன்படுத்தலாம். வேப்பிலையை நன்கு அரைத்து, அதை லேசாக முகத்தில் பூசிக்கொள்ளவும். சில நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமான நீரில் கழுவி விடுங்கள். இது எண்ணெய் பசையைப் போக்க நிச்சயம் உதவும்.

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னையா? – இதோ 5 தீர்வுகள்!

இரண்டு: முகத்தை அழகாக்க, பலவித மேக்கப் பொருட்களை உபயோகப்படுத்தினாலும் எண்ணெய் வழிவது அதிகரிக்கும். அதனால், முகத்தில் கெமிக்கல் கலக்காத, இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட பியூட்டி பொருட்களைப் பயன்படுத்துங்கள். மேலும், அதிக கோட் மேக்கப் போடுவதைத் தவிர்க்கவும். இதுவும் எண்ணெய் பசை வழிவதை குறைக்கும்.

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னையா? – இதோ 5 தீர்வுகள்!

மூன்று: கற்றாழை எப்போதுமே குளிர்ச்சி தரக்கூடியது. தலையில் தேய்த்துக்கொள்ள பலர் பரிந்துரைப்பார்கள். அதே கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து, சுத்தமான நீரில் நன்கு நழுவினால் எண்ணெய் பசை போகும்.

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னையா? – இதோ 5 தீர்வுகள்!

நான்கு: பலருக்கு தண்ணீர் பற்றாக்குறையாலும் முகத்தில் எண்ணெய் வழியலாம். தமக்கு அதுதானா பிரச்னை என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அப்படித் தெரிந்துகொண்டவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தாலே பெரும் சிக்கல் தீரும். இது முகத்திற்கு மட்டுமல்ல, உடல் உறுப்புகளுக்குமே நல்லது.

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னையா? – இதோ 5 தீர்வுகள்!

ஐந்து: எலிமிச்சைப் பழத்தை வைத்தும் எண்ணெய் பசைக்குத் தீர்வு காணலாம். எலுமிச்சை பழத்தினை நன்கு பிழிந்து, அதன் சாறை லேசாக முகத்தில் அப்ளை செய்யுங்கள். அது நன்கு காயும் விதத்தில் பத்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பின் சுத்தமான நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள். இதில், எலுமிச்சைப் பழ சாற்றை கண்கள், மூக்கு துவாரங்களில் பட்டு விடாமல் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். தோல் அலர்ஜி இருப்பவர்கள் பியூட்டிஷியன் ஆலோசனையோடு செய்ய வேண்டும்.

நன்கு ஆரோக்கியமான உணவும், மனத்தை நிம்மதியாக வைத்துக்கொண்டாலும் முகம் அழகாகி விடும்.