திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னையா? தினேஷ் குண்டுராவ் விளக்கம்!

 

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னையா? தினேஷ் குண்டுராவ் விளக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடித்து விட கணக்கு போட்டிருக்கும் திமுக, ஐபேக் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. ஐபேக்கின் பரிந்துரையின் பேரிலேயே கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் இருக்கின்றன. அதில், தொகுதி பங்கீடு மட்டும் என்ன விதிவிலக்கா?.. திமுகவின் தொகுதி பங்கீட்டில் ஐபேக்கின் தலையீடு இருப்பதால் முன்னில்லாத அளவுக்கு கறார் காட்டிக் கொண்டிருக்கிறது திமுக.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னையா? தினேஷ் குண்டுராவ் விளக்கம்!

வாக்கு வங்கியை உயர்த்தாத கட்சிகளுக்கு அதிக தொகுதி எதற்கு என கேட்கிறதாம் ஐபேக். திமுகவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கும் மக்கள் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு வாக்களிக்க தயாராக இல்லையென ஐபேக் ரிப்போர்ட் ஒன்றை கொடுத்திருக்கிறதாம். இதனாலேயே திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறியில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழக காங்கிரஸ் பிரமுகர்களோ தொகுதி பங்கீட்டில் எந்த வித பிரச்னையும் இல்லை என்பது போலவே சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னையா? தினேஷ் குண்டுராவ் விளக்கம்!

இந்த நிலையில், திமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு உறுதியாகும் என தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியிருக்கிறார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தார். திமுக இன்று காங்கிரஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.