விவசாயிகள் போராட்டம் 100 வாரங்கள் நீடித்தாலும் அதை காங்கிரஸ் ஆதரிக்கும்… பிரியங்கா காந்தி

 

விவசாயிகள் போராட்டம் 100 வாரங்கள் நீடித்தாலும் அதை காங்கிரஸ் ஆதரிக்கும்… பிரியங்கா காந்தி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 வாரங்கள் நீடித்தாலும் அதை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

மீரட்டில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகளின் போராட்டம் 100 வாரங்கள் அல்லது 100 மாதங்கள் நீடித்தாலும் அதனை காங்கிரஸ் ஆதரிக்கும். இது மீரட், சுதந்திர போராட்டத்தின் முதல் கிளர்ச்சி தொடங்கிய இடம். இங்கிருந்து நமது சுதந்திர போராட்டம் தொடங்கியது. அந்த சுதந்திர போராட்டத்தில் யார் ஈடுபட்டார்கள்? நம் தேசத்தை விடுவித்தது யார்? இந்த நாட்டின் விவசாயிகள் செய்தார்கள்.

விவசாயிகள் போராட்டம் 100 வாரங்கள் நீடித்தாலும் அதை காங்கிரஸ் ஆதரிக்கும்… பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். பலர் தியாகியினர், அவர்கள் மிகுந்த தைரியத்துடன் போராடினார்கள். எதற்காக போராட்டம்? பிரிட்டிஷ் நிர்வாகம் விவசாயிகளை சுரண்டிக்கொண்டு இருந்தது. பிரிட்டிஷ் நிறுவனத்துக்காக லகான் சேகரிக்கப்பட்டது. விவசாயிகள கடினமாக சம்பாதித்த பணத்தை பெற முடியவில்லை. அதே வழியில் பா.ஜ.க. அரசாங்கம் விவசாயிகளை சுரண்டுகிறது.

விவசாயிகள் போராட்டம் 100 வாரங்கள் நீடித்தாலும் அதை காங்கிரஸ் ஆதரிக்கும்… பிரியங்கா காந்தி
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

அது 3 சட்டங்களை கொண்டு வந்துள்ளது, உங்களை உங்கள் வருமானத்தை பெற அனுமதிக்காது. இந்த மூன்று சட்டங்களும் என்னவென்று உங்களுக்கு நன்றாக தெரியும். இரண்டாவது சட்டத்தால் தனியார் மண்டிகள் திறப்பது நல்லது போல் தெரியும். ஆனால் அரசு மண்டிக்கும், தனியார் மண்டிக்கும் இடையே குறைந்தபட்ச ஆதரவு விலை வேறுபாடு இருக்கும். 3வது சட்டத்தில் ஒரு கோடீஸ்வரர் உங்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட விரும்பினால் அவருக்கு அவ்வாறு செய்ய அனுமதி உண்டு. அதேசமயம் ஒப்பந்தப்படி விவசாயி நடத்தப்படா விட்டால் மற்றும் ஒப்பந்தப்படி விலை கிடைக்காவிட்டால் எந்தவொரு விவசாயியும் எந்த நீதிமன்றத்தையும் அணுக முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.