ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண் நீதிக்கு தகுதியானவள், அவதூறுக்கு அல்ல… பிரியங்கா காந்தி ஆவேசம்..

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண் நீதிக்கு தகுதியானவள், அவதூறுக்கு அல்ல… பிரியங்கா காந்தி ஆவேசம்..

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது புதிதாக குற்றம்சாட்டப்படுவது குறித்து, ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண் நீதிக்கு தகுதியானவள், அவதூறுக்கு அல்ல என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலித் பெண் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேச சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றும், சம்பவம் நடந்த அன்று பாதிக்கப்பட்ட பெண்தான் அந்த பையனை அழைத்து இருக்க வேண்டும் என்று ஒரு புது தகவலை அம்மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண் நீதிக்கு தகுதியானவள், அவதூறுக்கு அல்ல… பிரியங்கா காந்தி ஆவேசம்..
பிரியங்கா காந்தி

பா.ஜ.க.வின் மூத்த தலைவரின் கருத்துக்கு பிரியங்கா காந்தி ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், ஒரு பெண்ணின் நடத்தையை இழிவுப்படுத்தும் ஒரு கதையை உருவாக்குதல் மற்றும் அவளுக்கு எதிரான குற்றங்களுக்க எப்படியாவது அவளே பொறுப்பேற்க வேண்டும் என்பது கிளர்ச்சி மற்றும் பிற்போக்குத்தனமானது. ஹத்தராஸில் ஒரு கொடூரமான குற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 20 வயது தலித் பெண் இறந்து விட்டார் என பதிவு செய்து இருந்தார்.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண் நீதிக்கு தகுதியானவள், அவதூறுக்கு அல்ல… பிரியங்கா காந்தி ஆவேசம்..
ஹத்ராஸ் பெண்ணின் உடல் எரிப்பு

மற்றொரு டிவிட்டில், அவரது (ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின்) உடல் குடும்பத்தினர் பங்கேற்பு அல்லது சம்மதம் இல்லாமல் எரிக்கப்பட்டுள்ளது. அவள் நீதிக்கு தகுதியானவள், அவதூறுக்கு அல்ல என்று பிரியங்கா காந்தி பதிவு செய்து இருந்தார்.