எம்.எஸ்.பி.யை காட்டிலும் குறைந்த விலைக்கு பயிர்களை விற்பனை செய்யும் விவசாயிகள்.. பிரியங்கா காந்தி வேதனை

எம்.எஸ்.பி.யை காட்டிலும்  குறைந்த விலைக்கு பயிர்களை விற்பனை செய்யும் விவசாயிகள்.. பிரியங்கா காந்தி வேதனை

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி.) தற்போது உத்தரவாதம் உள்ளபோதிலும், அதனை காட்டிலும் குறைந்த விலைக்கு தங்களது பயிர்களை விற்க விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என பிரியங்கா காந்தி வேதனை மற்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரியங்கா காந்தி இது தொடர்பாக டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்களில், விவசாயிகளின் நலனுக்கு எதிரான வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் கடித மாநாட்டை பா.ஜ.க. அரசு நடத்துகிறது. ஆனால் விவசாயிகளின் வலியை கவனிப்பது இல்லை. உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான பகுதிகளில், தங்களது நெல்லை ரூ.1,000-1,100க்கு (ஒரு குவிண்டாலுக்கு) விற்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். இது குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.1,868ஐ காட்டிலும் ரூ.800 குறைவாகும்.

எம்.எஸ்.பி.யை காட்டிலும்  குறைந்த விலைக்கு பயிர்களை விற்பனை செய்யும் விவசாயிகள்.. பிரியங்கா காந்தி வேதனை
பிரியங்கா காந்தி

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் உள்ள நிலையிலும் இப்படி நடக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை நீக்கப்பட்டால் என்ன நிகழும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என பதிவு செய்து இருந்தார். மேலும், முகமதி கிரி மண்டியில் பயிர் கொள்முதல் செய்வதில் ஊழல் நடந்ததாக ஒரு விவசாயி குற்றம்சாட்டிய வீடியோ ஒன்றையும் அதனுடன் பதிவேற்றம் செய்து இருந்தார்.

எம்.எஸ்.பி.யை காட்டிலும்  குறைந்த விலைக்கு பயிர்களை விற்பனை செய்யும் விவசாயிகள்.. பிரியங்கா காந்தி வேதனை
பிரதமர் மோடி

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நீக்கப்படும் என கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால் பா.ஜ.க.வோ குறைந்தபட்ச ஆதரவு விலையை தொடரும் என்று கூறியுள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம், சமீபத்திய விவசாய சீர்த்திருத்தங்களை நாட்டின் வேளாண் துறையை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் மிக முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்ததோடு, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அரசு கொள்முதல் தொடரும் என்றும் உறுதியளித்தார்.