நெருக்கடியான காலங்களில் தலைமை அங்கீகரிக்கப்படுகிறது.. மத்திய அரசை விளாசிய பிரியங்கா காந்தி..

நெருக்கடியான காலங்களில் தலைமை அங்கீகரிக்கப்படுகிறது.. மத்திய அரசை விளாசிய பிரியங்கா காந்தி..

நாடு கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொண்டிருக்கும் வேளையில், மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்களை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தலைமையையும் அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி டிவிட்டரில், நெருக்கடியான காலங்களில் தலைமை அங்கீகரிக்கப்படுகிறது.

நெருக்கடியான காலங்களில் தலைமை அங்கீகரிக்கப்படுகிறது.. மத்திய அரசை விளாசிய பிரியங்கா காந்தி..

கொரோனாவின் தேசிய நெருக்கடியில், மக்களின் நலனுக்காக செயல்படும் ஒரு தலைமை நாட்டுக்கு தேவை ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்க முயற்சி செய்ததன் மூலம் அதன் நோக்கத்தையும் மற்றும் அதன் தன்மையையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் பதிலளிப்பார்கள் என பதிவு செய்து இருந்தார்.

நெருக்கடியான காலங்களில் தலைமை அங்கீகரிக்கப்படுகிறது.. மத்திய அரசை விளாசிய பிரியங்கா காந்தி..

ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில், பா.ஜ.க. எங்கள் அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது. சட்டப்பேரவை கூட்ட அழைப்பு விடுக்குமாறு கோரிய முதலமைச்சரின் வேண்டுகோளை கவர்னர் புறக்கணித்திருப்பது, மத்திய அரசு அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவதையும், ஜனநாயக மதிப்புகளுடன் விளையாடுவதையும் காட்டுகிறது என குற்றச்சாட்டினார்.