பொருளாதார வீழ்ச்சி.. என் தம்பி 6 மாதத்துக்கு முன்பே எச்சரித்தார்.. பிரியங்கா காந்தி

 

பொருளாதார வீழ்ச்சி.. என் தம்பி 6 மாதத்துக்கு முன்பே எச்சரித்தார்..  பிரியங்கா காந்தி

நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி காணும் என எனது சகோதரர் 6 மாதத்துக்கு முன்பே எச்சரிக்கை செய்தார் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மந்தகதியில் இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நம் நாட்டில் கொரேனா வைரஸ் பரவ தொடங்கியது. கடந்த பிப்ரவரியில் வைரஸ் அதிகரிக்க தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதனால் கடந்த ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

பொருளாதார வீழ்ச்சி.. என் தம்பி 6 மாதத்துக்கு முன்பே எச்சரித்தார்..  பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை குறிப்பிட்டு மத்திய அரசை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். பிரியங்கா காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், 6 மாதத்துக்கு முன்பே பொருளாதார சுனாமி குறித்து ராகுல் காந்தி எச்சரிக்கை செய்தார். கொரோனா வைரஸ் நெருக்கடி நேரத்தில் பெயருக்கு நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட்டது. இப்போது நிலவரத்தை பாருங்க, மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது என பதிவு செய்து இருந்தார்.

பொருளாதார வீழ்ச்சி.. என் தம்பி 6 மாதத்துக்கு முன்பே எச்சரித்தார்..  பிரியங்கா காந்தி
மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி

கடந்த 2020 ஜூன் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.26.90 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.35.35 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த காலாண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் சரிவடைந்துள்ளது.