நிதி நிறுவனம் நடத்தி ரூ.2.5 கோடி பண மோசடி – தொழிலதிபர் கைது

 

நிதி நிறுவனம் நடத்தி ரூ.2.5 கோடி பண மோசடி – தொழிலதிபர் கைது

ஈரோடு

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (38). அரசு லேப் டெக்னீசியனாக பணிபுரியும், இவர் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையத்தில் செயல்படும் கே.எம்.ஜி டிரேடிங் அகாடமியில் தான் 2 கோடியே 55 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், ஆனால் அதற்கான வட்டியும், முதலீடும் திருப்பி கொடுக்க வில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெய்கணேஷிடம் கே.எம்.ஜி டிரேடிங் அகாடமி உரிமையாளர் கோவிந்தராஜன் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அந்த நிறுவனத்தின் மீதும், கோவிந்தராஜன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கோவிந்தராஜனை தேடி வந்தனர்.

நிதி நிறுவனம் நடத்தி ரூ.2.5 கோடி பண மோசடி – தொழிலதிபர் கைது

இந்த நிலையில், ஈரோடு ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பதுங்கியிருந்த கோவிந்தராஜனை, நேற்று ரகசிய தகவலின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் ஹேமா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து பேசிய மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜேஷ், கே.ஜி.எம். அகாடமியில் முதலீடு செய்து பலர் ஏமாந்து உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் நேரடியாகவும், 0424 – 2256700, 9498178566 ஆகிய எண்ணிலும் தெரிவிக்கலாம் என கூறினார்.