பிரதமர் மோடியின் நமோ செயலி இந்தியர்களின் தனியுரிமைகளை மீறியது.. பிரித்விராஜ் சவான் பகிரங்க குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் நமோ செயலி இந்தியர்களின் தனியுரிமைகளை மீறியது.. பிரித்விராஜ் சவான் பகிரங்க குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு நமோ செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலியை பயன்படுத்துபவர்கள் பிரதமர் மோடியின் செய்திகளை உடனடியாக பெற முடியும் மற்றும் தங்களது கருத்துக்களையும், யோசனைகளையும் அவருக்கு தெரிவிக்க முடியும். இந்த செயலியை பா.ஜ.க. உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் நமோ செயலி இந்தியர்களின் தனியுரிமைகளை மீறியது.. பிரித்விராஜ் சவான் பகிரங்க குற்றச்சாட்டு

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வமான நமோ செயலி இந்தியர்களின் தனியுரிமையை மீறுகிறது என காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவான் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரித்விராஜ் சவான் டிவிட்டரில், 59 சீன செயலிகளை தடை செய்ததன் மூலம் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையை மோடி அரசு பாதுகாத்தது நல்லது. 22 டேட்டா விவரங்களை அணுகுவதன் வாயிலாக இந்தியர்களின் தனியுரிமையை நாமோ செயலியும் மீறுகிறது, தனியுரிமை அமைப்புகளை மறைமுகமாக மாற்றி, அமெரிக்காவில் உள்ள மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு டேட்டாக்களை அனுப்புகிறது என பதிவு செய்து இருந்தார்.

பிரதமர் மோடியின் நமோ செயலி இந்தியர்களின் தனியுரிமைகளை மீறியது.. பிரித்விராஜ் சவான் பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி செல்போன் மற்றும் இதர மின்னணு கருவிகளில் பயன்படுத்தக்கூடிய டிக்டாக், ஷேர் இட் மற்றும் கேம் ஸ்கேனர் உள்பட 59 சீன செயலிகளுக்கு நேற்று முன்தினம் மத்திய அரசு தடை விதித்தது. சீன செயலிகள் தடை மேற்கோள்காட்டி நமோ செயலி இந்தியர்களின் தனியுரிமையை மீறுகிறது என நேற்று காங்கிரஸின் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் குற்றச்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.