பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்…

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்…

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது மற்றும் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் தகவல் அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்…

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை வேகமாக நெருங்கி கொண்டு இருக்கிறது. இதனால் பிரதமர் மோடி இன்று தனது உரையில் கொரோனா வைரஸ் தொடர்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்…

அதேசமயம் மத்திய அரசு நேற்று சீனாவை சேர்ந்த 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. எல்லையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் பிரான்சிலிருந்து ரபேல் போர் விமானங்கள் ஜூலை இறுதிக்குள் இந்தியாவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிரதமர் மோடி இன்று இந்தியா-சீனா இடையிலான பதற்றம், ரபேல் போர் விமானங்கள் வருகை தொடர்பாகவும் பேசுவார் என எதிர்பார்ககப்படுகிறது.