டிசம்பர் 10ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் தொடக்கம்.. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..

 

டிசம்பர் 10ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் தொடக்கம்.. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..

ரூ.862 கோடி மதிப்பில் உருவாக உள்ள புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் டிசம்பர் 10ம் தேதி தொடங்குகிறது. அன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டுவார்

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது. 1927ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் 1950ம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது மற்றும் எதிர்காலத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது போதுமானதாக இருக்காது மேலும் நவீன வசதிகளை ஏற்படுத்தவும் முடியவில்லை இதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய நாடாளுமன்ற வளாக கட்டிடம் கட்ட முடிவு செய்தது. புதிய நாடாளுமன்ற வளாக கட்டிடத்தை டாடா புராஜெக்ட் நிறுவனம் கட்ட உள்ளது.

டிசம்பர் 10ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் தொடக்கம்.. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..
பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய நாடாளுமன்ற கட்டும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என குரல்கள் எழுந்தது. இதனால் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் திட்டமிட்டப்படி தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் புதிய நாடாளுமன்ற பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள உறுதியாகி உள்ளது. டிசம்பர் 10ம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டுவார். கட்டுமான பணிகள் தொடங்கிய 21 மாதங்களில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டி முடிக்கப்படும்.

டிசம்பர் 10ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் தொடக்கம்.. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..
டாடா புராஜெக்ட் நிறுவனம்

புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்றத்தின் அமைப்பு முக்கோண வடிவில் இருக்கும். புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் திறன் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனி அலுவலக அறை மற்றும் காகிதம் அல்லா அலுவலகத்தை உருவாக்கும் நோக்கில் அந்த அலுவலகங்களில் நவீன டிஜிட்டல் கருவிகளும் பொருத்தப்படும். இந்தியாவின் ஜனநாயக பராம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பெரிய அரசியலமைப்பு ஹால், நூலகம், பல குழு அறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை, டைனிங் ஹால்கள் மற்றும் தாராளமான பார்க்கிங் பகுதி போன்ற வசதிகள் புதிதாக உருவாக உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் என தகவல்.