பிரதமர் மோடியின் “முருங்கைக்காய் ” ரகசியம்?

 

பிரதமர் மோடியின் “முருங்கைக்காய் ” ரகசியம்?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வயது 70 ஆகிறது. சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு அவர்தான் தலைவர் என்கிற பட்சத்தில் அவரது உடலும், உள்ளமும் பலமாக இருந்தால்தான் தீவிரமாக செயலாற்ற முடியும். அந்த வகையில் மோடி தனது உடல் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

பிரதமர் மோடியின் “முருங்கைக்காய் ” ரகசியம்?


தினமும் காலை 4 மணிக்கு எழுந்து விடும் பழக்கம் கொண்ட அவர் கண் விழிப்பது தனது இரு கைகளையும் சாமி கும்பிட்டது போல் வைத்து அந்தக் கைகளைத் திறந்து பார்த்து, அதன் மீதுதான் கண் விழிப்பார்.அதிகாலையிலேயே யோகாசனம் செய்ய ஆரம்பித்து விடுவார். முன்னதாக தியானம் மேற்கொள்வார். இது தவிர பஞ்ச தத்துவ முறைப்படி

பிரதமர் மோடியின் “முருங்கைக்காய் ” ரகசியம்?

நடைப்பயிற்சி மேற்கொள்வார். இது பண்டைய கால முறையாகும். இதன்படி தரை,புல்,நீர்,கூழாங்கற்கள் மீது வெறும் காலுடன் நடந்து செல்வார்.அரை மணி நேரம் உடல் பயிற்சியும் உண்டு.
அவரது உணவு வகைகள் சிம்பிளானதுதான். இட்லி, தோசை, கிச்சடி, மசித்த பருப்புடன் நெய், சாதம், சப்பாத்தி இவற்றுடன் அதிக அளவு காளான்கள் சாப்பிடுவார். தினமும் 2 வேளை காளான்கள் சாப்பிடுவார். சைவச் சாப்பாடுதான் அவருக்குப் பிடித்தது. அடிக்கடி எலுமிச்சை ஜூஸ்

பிரதமர் மோடியின் “முருங்கைக்காய் ” ரகசியம்?

குடிப்பார்.முருங்கைக்காயை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார். இது குறித்து அவரே சொல்லியிருக்கிறார்.. “முருங்கைக்காயில், தாது மற்றும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது.நான் வாரத்தில் இரு முறையாவது, முருங்கைக் காய் சாப்பிடுவேன். எல்லாப் பகுதியிலும் கிடைக்கிற முருங்கைக்காயை மக்களும் சாப்பிட வேண்டும் முருங்கை சாப்பிடுவதால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். உடல் எடையை குறைக்கலாம்.” என்று சொல்லியிருக்கிறார்.
சராசரியாக இரவு 11 மணிக்கு தூங்கச் செல்லும் மோடியின் மொத்த தூக்க நேரம் 5 அல்லது 6 மணி நேரம்தான். ஆனால் படுத்த 30 வினாடிகளில் அவர் தூங்கி விடுவதாகவும் ஒரு முறை சொல்லியிருக்கிறார். –இர.போஸ்