தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

 

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

பிரதமர் மோடி ‘மான்கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் 68வது எபிசோடில் நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றினார். அப்போது பேசிய மோடி, “தமிழ்நாட்டிலேயே பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது. விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

பொம்மைகள் உருவாக்குவதே புதிய கல்விக் கொள்கையில் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை கணினிமயமாக்குவது சிறப்பாக இருக்கும். நமது பழங்கால விளையாட்டு முறைகளை புதிய டிஜிட்டல் கேமரா உருவாக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய வேண்டும்” என்றார்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

தொடர்ந்து பேசிய அவர், “ராஜபாளையம், சிப்பிபாறை போன்று இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்கள் சிறப்பாக பணியாற்ற கூடியவை. இந்திய இனத்தை சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும்” என மோடி அறிவுறுத்தினார்.

மேலும் வருகிற செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நடைபெற உள்ளது. ஊட்டச்சத்து தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது” என்றார்.