இந்தியப் பெண்களின் பெருமிதம் – புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து

இந்தியப் பெண்களின் பெருமிதம் – புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதை அடுத்து, ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்து மழை பொழிகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பெண்களின் பெருமிதம் – புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

’’விடா முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை எனும் ஆயுதங்களால்,தனக்கான வெற்றிப் பாதையை தானே உருவாக்கி ஒலிம்பிக்கில் தொடர் வெற்றியாக, 2021லும் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்று இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள பெருமைக்குரிய அன்பு சகோதரி பி.வி.சிந்து அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடிபழனிச்சாமி.

இந்தியப் பெண்களின் பெருமிதம் – புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து

’’டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனையை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ள தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிவி சிந்து அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சிந்து அவர்கள் தன்னுடைய குறிப்பிடத்தகுந்த சாதனையின் மூலம் இந்திய தேசத்திற்கு பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கிறார். இவருடைய வெற்றி விளம்பர விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும்’’ என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்.

இந்தியப் பெண்களின் பெருமிதம் – புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து

’’ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே ஒரு சாதனை. பதக்கம் வெல்வது பெரும் சாதனை. இரண்டு முறை பதக்கம் வெல்வது வரலாற்றுச் சாதனை. புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.

இந்தியப் பெண்களின் பெருமிதம் – புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளின் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள்! தனிநபர் பிரிவில் தொடர்ந்து இரு முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சிந்து ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அடுத்து வரும் போட்டிகளில் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியாவை முன்னேற்றுவதற்கு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார் பாமக நிறூவனர் ராமதாஸ்.

இந்தியப் பெண்களின் பெருமிதம் – புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து

’’ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே ஒரு சாதனை. பதக்கம் வெல்வது பெரும்சாதனை. இரண்டு முறை பதக்கம் வெல்வது வரலாற்றுச் சாதனை. புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.’’என்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.