இன்று இரவு முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

 

இன்று இரவு முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தது. ஆனால் ஆளும்கட்சி எம்எல்ஏக்களின் திடீர் ராஜினாமாவால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி அரசு இழந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரியில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இன்று இரவு முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

இந்நிலையில் இன்று இரவு முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது. அதற்கான ஆணையை குடியரசு தலைவர் மளிகை இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்த செய்தி அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் ஏதேனும் ஒரு காரணத்தால் கலைக்கப்பட்டாலோ அல்லது இயங்க முடியாமல் போனாலோ அங்கு மத்திய அரசின் கண்காணிப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும்.