வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி ; தேர்தல் பார்வையாளர் ஆய்வு

 

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி ; தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரான கைத்தறி மற்றும்
துணிநூல் துறை இயக்குநர் கருணாகரன் கலாந்துகொண்டு பேசினார். அப்போது, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய
நாட்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு
சுருக்க திருத்த முகாம்களில், சுமார் 42 ஆயிரத்து 133 படிவங்கள் பெறப்பட்டுள்ளது என்றும், அந்த படிவங்கள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுடன் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி ; தேர்தல் பார்வையாளர் ஆய்வு

மேலும், படிவம் 6,7,8 மற்றும் 8(யு)-ன் கீழ் விண்ணப்பித்தவர்களின் படிவங்களை முறையாக ஆய்வுமேற்கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்திய கருணாகரன், டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு சுருக்க திருத்த முகாமில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார். இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர்விதா, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.