திருப்பத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை

திருப்பத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இன்று முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது.

திருப்பத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான 6 ஆயிரத்து 180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சில நாட்களுக்கு முன்பு வந்தடைந்தன. அங்குள்ள வேளாண் உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் இன்று முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது.

திருப்பத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடந்த இந்த சோதனையில், பெல் நிறுவன அதிகாரிகள் பேலட் யூனிட், விவிபேட் மெஷின் உள்ளிட்டவற்றின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.