குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

 

குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

திண்க்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த விருப்பாட்சி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் அருள்மோகன். இவர் செல்போன் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு குமரி மாவட்டம் பாஸ்கோடு அகதிகள் முகாமை சேர்ந்த ஜுவிதாவுக்கும் கடந்த 1 வருடத்திற் முன் திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் விருப்பாட்சி அகதிகள் முகாமில் வசித்து வந்த நிலையில் ஜுவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில், பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்து வந்த அருள்மோகன், தாயம் விளையாட பக்கத்து வீடுகளுக்கு சென்று வந்துள்ளார். கர்ப்பிணியான தன்னை பற்றி கவலையின்றி கணவர் தாயம் விளையாடச் சென்றதால் ஆத்திரமடைந்த ஜூவிதா விளையாட செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். அதனை மீறி அருள்மோகன் சென்றதால் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

இது தொடர்பாக, ஜூவிதாவுக்கும், அருள்மோகனுக்கும் நேற்று முன்தினம் மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஜுவிதா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக ஜுவிதாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 1 வருடத்திற்குள் பெண் இறந்ததால் இது தொடர்பாக பழனி கோட்டாட்சியர் ஆனந்தி விசாரணை நடத்தி வருகிறார்.