சரத் பவார் பிரதமராவதை 2 முறை தடுத்த காங்கிரஸ்காரர்கள்…. உண்மையை போட்டு உடைத்த பிரபுல் படேல்

 

சரத் பவார் பிரதமராவதை 2 முறை தடுத்த காங்கிரஸ்காரர்கள்…. உண்மையை போட்டு உடைத்த பிரபுல் படேல்

சரத் பவார் பிரதமராவதை 2 முறை காங்கிரஸ்காரர்கள் தடுத்தார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரபுல் படேல் சாம்னா பத்திரிகையில் சரத் பவார் குறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: ராஜீவ் காந்தியின் எதிர்பாராத மரணத்துக்கு பின்னர் காங்கிரஸ் அதிர்ச்சியில் இருந்தது. அப்போது கட்சியின் தலைவராக சரத் பவாரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் அதனை விரும்பாத சில தலைவர்கள் நரசிம்ம ராவை கட்சி தலைவராக நியமனம் செய்தனர். அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெறுவதற்கு நெருக்கமாக வென்றது.

சரத் பவார் பிரதமராவதை 2 முறை தடுத்த காங்கிரஸ்காரர்கள்…. உண்மையை போட்டு உடைத்த பிரபுல் படேல்
சரத் பவார்

அப்போது சரத் பவாரை பிரதமராக நியமனம் செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் கோரிக்கை எழுந்தது. ஆனால் அப்போதும் அதே தலைவர்கள் சரத் பவார் பிரதமராவதை விரும்பாமல் சோனியா காந்தியின் பெயரை தவறாக பயன்படுத்தி நரசிம்ம ராவை பிரதமராக தேர்ந்தெடுத்தனர். 1996ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 145 இடங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும் நரசிம்ம ராவுக்கு பதிலாக சரத் பவாரை காங்கிரஸ் பிரதம வேட்பாளராக தேர்ந்தெடுத்தால், எச்.டி. தேவ கவுடா, முலாயம் சிங் யாதவ் மற்றும் இதர தலைவர்கள் ஆட்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள்.

சரத் பவார் பிரதமராவதை 2 முறை தடுத்த காங்கிரஸ்காரர்கள்…. உண்மையை போட்டு உடைத்த பிரபுல் படேல்
பிரபுல் படேல்

ஆனால் நரசிம்ம ராவும், அந்த காங்கிரஸ் தலைவர்களும் அதனை விரும்பவில்லை. அதனால் தேவ் கவுடா தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு வழங்கியது. 1997ல் காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரி, தேவ கவுடா அரசாங்கத்துக்கான ஆதரவை திரும்ப பெற்றார். இதனையடுத்து சரத் பவார் வீட்டில் கூடிய 125 எம்.பி.க்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் கட்சிக்குள் பிளவை விரும்பாத சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் பிரதமர் பதவியை பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது அது இரண்டாவது முறையாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பவார் காங்கிரசிலிருந்து வெளியேறி பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.