சசிகலாவை சந்தித்த திரைபிரபலங்கள்!!

 

சசிகலாவை சந்தித்த திரைபிரபலங்கள்!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் விருப்பமனு விநியோகத்தை தொடங்கியுள்ளன. இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருப்பதால் கூட்டணிக் கட்சிகள், பிரதான கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக மற்றும் சமத்துவ மக்கள் கட்சிகள் கூட்டணியில் இருந்து பின்வாங்கப் போவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவை சந்தித்த திரைபிரபலங்கள்!!

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சசிகலாவை சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் சந்தித்து பேசினர். அத்துடன் அமீர், சீமான் உள்ளிட்டோரும் நேற்று சசிகலாவை சந்தித்து பேசினர். இந்த சூழலில் திநகர் இல்லத்தில் உள்ள சசிகலாவை நடிகர் பிரபுவும், இயக்குநர் லிங்குசாமியும் தற்போது சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அதற்கு முன்பு இன்று மாலை 5 மணியளவில் எம்.எல்.ஏ தனியரசு சசிகலாவை சந்தித்து பேசினார்.