சக்தி வாய்ந்த தெய்வங்கள் அனைத்தும் பெண்களே!

 

சக்தி வாய்ந்த தெய்வங்கள் அனைத்தும் பெண்களே!

ஓர் உயிரைப் படைப்பவளும், இனத்தை விருத்தி செய்பவளுமாகிய பெண்கள் வணக்கத்துக்கு உரியவர்கள். சக்தி வாய்ந்த தெய்வங்கள் அனைத்தும் பெண் தெய்வங்களாகவே இருந்திருக்கின்றன.
உமையவளாகிய பராசக்தியை உலகமாதா என்று வழிபடுகிறோம். அவளே கோயில்களில் இறைவனோடு சேர்ந்து அம்மையப்பராய் அருள்பாலிக்கிறாள்.

வல்வை மானாங்கானை பராசக்தி அம்மன் ஆலயத்தின் 9ம் நாள் தேர் அலங்கார உற்சவம்  26.07.2018 | vvtuk.com

இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்றான அருளல் என்னும் அருட்சக்தியே அம்பிகையாக உருவெடுத்து அருள்புரிவதாக ஆகமங்கள் கூறுகின்றன. அதே நேரம், கருணையே உருவான அம்பிகை உக்கிர ரூபமாகி அசுரசக்திகளை அழிக்கும் போது ‘காளி” என்று பெயர் பெறுகிறாள்.

சக்தி வாய்ந்த தெய்வங்கள் அனைத்தும் பெண்களே!

பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை ‘தேவி பாகவதம்” விரிவாகப் பேசுகிறது.

உலக உற்பத்திக்கு காரணமான இறைவன் அனேக மூர்த்தங்களின் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் விளங்கிய போதிலும் அவையனைத்தையும் ஒன்றாக்கித் தாயான ஸ்வரூபத்தில் வழிபடுதல்தான் பெரும்பயனைத் தருமென பிரபஞ்சவுற்பத்தி எனும் நூல் கூறுகின்றது.

சக்தி வாய்ந்த தெய்வங்கள் அனைத்தும் பெண்களே!

அத்தனை தெய்வங்களுமே, அந்தக் தேவியின் ஒப்பற்ற மாயையினால்தான் திகழ்கிறார்கள். படைத்தல், காத்தல், அழித்தல், அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே. புரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள் அவளே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே . இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தும் நாட்கள்தான் நவராத்தி என கொண்டாடப்படுகிறது.