“தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வை ஒத்தி வையுங்கள்” – மு.க.ஸ்டாலின்

 

“தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வை ஒத்தி வையுங்கள்” – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வை தமிழ்நாடு முழுவதும் நடத்தும் திட்டத்தினைக் கைவிட்டு, கொரோனா இரண்டாவது அலை தீவிரத்தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வை ஒத்தி வையுங்கள்” – மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) சார்பாக 10906 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வினை வரும் 21-04-2021 முதல் தமிழ்நாடு முழுவதும் நடத்தும் திட்டத்தினைக் கைவிட்டு, #CoronaSecondWave தீவிரத்தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறைக்காவலர் தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10 ஆயிரத்து 906 காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 21 முதல் ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும் நடத்த உள்ளதாக தெரிகிறது. திருவிழாக்கள் ,திருமணங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் இத்தேர்வினையும் ஒத்தி வைப்பதே சரியான முடிவாக இருக்கும். கொரோனா இரண்டாம் அலை தீவிரத் தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்