“சசிகலா தாய் இல்லை பேய்” என விமர்சித்த முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்பு

 

“சசிகலா தாய் இல்லை பேய்” என விமர்சித்த முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்பு

சசிகலாவை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அமமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

“சசிகலா தாய் இல்லை பேய்” என விமர்சித்த முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்பு

அதிமுக முன்னாள் அமைச்சரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விசுவநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலா குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதில் அவர் சசிகலாவை வேஸ்ட் லக்கேஜ் என்றும், தாய் அல்ல பேய் எனவும் விமர்சித்து இருந்தார். சசிகலா குறித்து நத்தம் விஸ்வநாதன் விமர்சனம் செய்திருந்த நிலையில் கோவையில் அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. கோவை நகரில் ரயில் நிலையம், உக்கடம் ஆத்துப்பாலம் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் அமமுக சார்பில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் சசிகலா குறித்து அவதூறாக பேசியதை கண்டிப்பதாக, சசிகலா புகைப்படத்துடன் அமமுகவினர் சுவரொட்டிகளை ஓட்டியுள்ளனர்.