கிசான் மோசடியில் ஈடுபட்டவர்கள் விவரத்துடன் பொதுவெளியில் போஸ்டர்… பணத்தை கொடுங்க என தண்டோரா மூலம் அறிவிப்பு

 

கிசான் மோசடியில் ஈடுபட்டவர்கள் விவரத்துடன் பொதுவெளியில் போஸ்டர்… பணத்தை கொடுங்க என தண்டோரா மூலம் அறிவிப்பு

சேலம் மாவட்டம் பெத்தநாயகன் பாளையம் பகுதிகளில் கிசான் முறைகேட்டில் நிதி பெற்றவர்கள் பணத்தை திரும்பி செலுத்தக்கோரி தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது அண்மையில் அம்பலமானது. இதனையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, எந்தெந்த மாவட்டங்களில் மோசடி நடந்திருக்கிறது என்பதையும் எவ்வளவு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்தனர். சில நாட்களுக்கு முன்னர் கிசான் மோசடி குறித்து பேசிய வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங், ரூ.110 முறைகேடு நடந்துள்ளதாகவும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மோசடி நடந்திருப்பதாகவும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கிசான் மோசடியில் ஈடுபட்டவர்கள் விவரத்துடன் பொதுவெளியில் போஸ்டர்… பணத்தை கொடுங்க என தண்டோரா மூலம் அறிவிப்பு

இந்நிலையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கிசான் திட்டத்தின் கீழ் முறைகேடாக நிதி பெற்றவர்கள் பட்டியல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. போலியாக இணைக்கப்பட்டவர்களின் பெயர், வங்கி கணக்கு எண் தொலைபேசி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. 36 ஊராட்சியிலும் யார் யார் முறைகேடாக பணம் பெற்றவர்கள் என்ற விவரங்களும் ஒட்டப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் மோசடி செய்து பணத்தை பெற்றவர்கள் அதனை திரும்ப செலுத்த தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.