ஈபிஎஸுக்கு எதிராக போஸ்டர் : 3 பேர் மீது வழக்குப்பதிவு !!

 

ஈபிஎஸுக்கு  எதிராக போஸ்டர் : 3 பேர் மீது வழக்குப்பதிவு !!

எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்-க்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

ஈபிஎஸுக்கு  எதிராக போஸ்டர் : 3 பேர் மீது வழக்குப்பதிவு !!

இந்த சூழலில் நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்தது. ஓபிஎஸை கலந்தாலோசிக்காமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது அவரை ; ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகளின் காரணமாகவே சட்டமன்ற தேர்தலில் தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் எதிர் காலங்களில் இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டால் தலைமை கழகத்தின் முற்றுகையிடுவோம் எனவும் மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஈபிஎஸுக்கு  எதிராக போஸ்டர் : 3 பேர் மீது வழக்குப்பதிவு !!

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் சிலர் மீண்டும் போஸ்டர் அடித்து ஒட்டினர். அதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என நெல்லை மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

ஈபிஎஸுக்கு  எதிராக போஸ்டர் : 3 பேர் மீது வழக்குப்பதிவு !!

இந்நிலையில் நெல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய புகாரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஸ்தா பகுதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் மாயகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீதும் மானூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.