ஓபிஎஸ் கிட்ட கேட்காம எதையும் செய்யாதீங்க : எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்!!

 

ஓபிஎஸ் கிட்ட கேட்காம எதையும் செய்யாதீங்க  : எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்!!

நெல்லையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் கிட்ட கேட்காம எதையும் செய்யாதீங்க  : எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். இதில் ஓபிஎஸ்சுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து இன்னும் மௌனமே பதிலாக உள்ளது. அத்துடன் அரசு நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். அவருக்கு ஸ்டாலின் அரசால் அமைச்சருக்கு அளிக்கப்படும் மரியாதை அளிக்கப்படுகிறது. சமீபத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து சமீபத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் ஓபிஎஸ் கலந்துகொள்ளவில்லை.இதனால் இருவருக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியானது.ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி மறுக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இருவரும் சந்தித்து பேசினர்.

ஓபிஎஸ் கிட்ட கேட்காம எதையும் செய்யாதீங்க  : எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்!!

இந்நிலையில் நெல்லை மாவட்டம் மானூரில் அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஓபிஎஸ்சிடம் ஆலோசிக்காமல் செயல்பட்டதால் தான் தேர்தலில் தோல்வி என்றும் போஸ்டரில் வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது திமுக, அமமுக கட்சியினரின் சதி என நெல்லை அதிமுக அமைப்பு செயலாளர் பரமசிவம் கூறியுள்ளார்.