காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் ‘கமல் பட நாயகி’!

 

காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் ‘கமல் பட நாயகி’!

காங்கிரஸிலிருந்து விலகிய பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் சிவசேனா கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் ‘கமல் பட நாயகி’!

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர்  தமிழில் கமல் ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து மெகா ஹிட் அடித்த, இந்தியன் படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இயக்குநர்  ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ரங்கீலா, சத்யா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இது தவிர  மலையாளம், கன்னடம், மராத்தி படங்களிலும் ஊர்மிளா  நடித்துள்ளார்.

காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் ‘கமல் பட நாயகி’!

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் ஊர்மிளாவுக்கு தோல்வியே கிடைத்தது.

காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் ‘கமல் பட நாயகி’!

இந்நிலையில் பாலிவுட் நடிகை ஊர்மிளா உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இன்று இணைந்தார். காங்கிரஸில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் சிவசேனாவில் தன்னை இணைத்து கொண்டார்.