கர்ப்ப கால தவறுகள்… குழந்தைக்கு உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தும்!

 

கர்ப்ப கால தவறுகள்… குழந்தைக்கு உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தும்!

கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளாமல் அதிக கலோரி உள்ள உணவு, இனிப்பு, உப்பு அதிகம் உள்ள நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்பு வரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்ப கால தவறுகள்... குழந்தைக்கு உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தும்!

டப்ளின் பல்கலைக் கழகத்தின் பொது சுகாதாரத் துறை சார்பில் கர்ப்பிணிகள் உணவு மற்றும் அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அயர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 12,295 தாய் மற்றும் சேய்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கர்ப்பிணியாக இருக்கும்போது இந்த ஆய்வு தொடங்கியது. அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட உணவு, அவர்களின் பி.எம்.ஐ உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு வந்தது.

அதிக காய்கறி, பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு குறைவான உணவுகள் உள்ளிட்டவை எடுத்துக்கொண்ட பெண்களுக்கும் சரிவிகித ஊட்டச்சத்து இல்லாத, அதிக கலோரி, சர்க்கரை கொண்ட உணவுகளை உட்கொண்ட பெண்களையும் கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த ஆய்வில், கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவை எடுக்கத் தவறும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடல்பருமன், உடல் கொழுப்பு அதிகரிப்பு உள்ளிட்டவை ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இப்படி ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ளாத பெண்களுக்கு கர்ப்பம் தரித்ததிலிருந்து 2 வயது வரையில் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.

இந்த இளம் பருவத்திலேயே உடல் பருமன், டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் இதர உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்ப காலத்தில் தாய் எடுக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுதான் குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது என்பது தெளிவாகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.