புறம் சொல்வதை விட்டுவிட்டு கட்சிக்கு தலைமையை தேடுங்கள்! சிவி சண்முகத்தை விளாசிய பொன்முடி

 

புறம் சொல்வதை விட்டுவிட்டு கட்சிக்கு தலைமையை தேடுங்கள்! சிவி சண்முகத்தை விளாசிய பொன்முடி

அதிமுக எம்எல்ஏ சக்கரபாணியின் மகன் கல்குவாரி ஒன்றை நடத்துவதாகவும் அதற்கு அமைச்சர் சி.வி,சண்முகம் லைசைன்ஸ் கொடுத்துள்ளார். அதிமுக அரசில் டெண்டர்கள் அனைத்தும் வேண்டியவர்களே கொடுக்கப்பட்டு வருகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் சிவி சண்முகம், பொது ஊழியர்களின் உறவினர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளக் கூடாது என எந்த விதியும் இல்லை ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார். மாறாக வானூர் வட்டாட்சியரை மிரட்டி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக பொன்முடி மீது வழக்கு தொடுத்ததையும் அமைச்சர் சிவி சண்முகம் சுட்டிக்காட்டினார்.

புறம் சொல்வதை விட்டுவிட்டு கட்சிக்கு தலைமையை தேடுங்கள்! சிவி சண்முகத்தை விளாசிய பொன்முடி

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, “அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகப் போடப்பட்ட வழக்கு, அமைச்சர் சி.வி.சண்முகத்தால் போடப்பட்ட பொய் வழக்கு. அமைச்சர் சி.வி.சண்முகம் தான் என் மீது பொய் வழக்கு போட சொன்னார் என்று வட்டாச்சியரே சொல்லி உள்ளார். ஸ்டாலினின் அறிக்கை மொட்டைதலைக்கும் முழங்கால்க்கும் முடிச்சி போடும் செயல் தான். அரசாங்கம் இடம் வேறு, தனியார் பட்டா இடம் வேறு அது தெரியாமல் அமைச்சர் பேட்டி கொடுத்துள்ளார். அவர் தவறை செய்துவிட்டு எங்கள் மீது பொய்யாக சொல்லி வருகிறார். திமுக தான் 234 தொகுதிகளில் வெற்றிப்பெறும், அதிமுக கட்சிக்கு தலைமையே இல்லை அதை முதலில் உருவாக்குங்கள். பிறகு மற்றக்கட்சிகளை பற்றி புறம் பேசலாம்” என தெரிவித்தார்.