‘ரூ.2,500 பொங்கல் பரிசு’ – முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை!

 

‘ரூ.2,500 பொங்கல் பரிசு’ – முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை!

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் ரூ.1,000 வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதோடு, ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக ஒரு முழு கரும்பும் அரிசி, சர்க்கரை, முந்திரி உள்ளிட்ட பரிசு தொகுப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

‘ரூ.2,500 பொங்கல் பரிசு’ – முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை!

இந்த நிலையில், பொங்கல் பரிசு வழங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், ரேஷன் அட்டைகளுக்கான பொங்கல் பரிசு வழங்கும் போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் பெண்களுக்கென தனி வரிசை அமைக்க வேண்டும் என்றும் 1000 ரேஷன் கார்டுக்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாளொன்றுக்கு காலை 200 பேருக்கும், பிற்பகல் 200 பேருக்கும் மிகாமல் பொங்கல் பரிசுத் தொகையை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.