தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் விநியோகம் தொடக்கம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் விநியோகம் தொடக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், 2500 ரூபாய் ரொக்கப்பணம் விநியோகம் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் விநியோகம் தொடக்கம்

திருப்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 9 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, சுமார் 2 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் விநியோகம் தொடக்கம்

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் நியாயவிலைக் கடையில் நடந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரொக்கமாக 2,500 ரூபாயை வழங்கினார். இதனை பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்றுச்சென்றனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் விநியோகம் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அதிமுக முன்னாள் எம்.பி., கோ.அரி தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து, அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் டோக்கன் பெற்று அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று சிறப்பு தொகுப்பு மற்றும் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்..

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் விநியோகம் தொடக்கம்

ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏ கே.வி.ரமலிங்கம் கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதேபோல் ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில் நடந்த விழாவில் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரைரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் வரமுடியாதவர்கள் வரும் 13ம் தேதி அன்று ரேஷன் கடையில் நேரடியாக சென்று பெற்றுச் செல்லலாம் என்றஅதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் விநியோகம் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நத்தம் ஒன்றியக் குழு தலைவர் கண்ணன் கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். நத்தம் சட்டமன்ற தொகுதிகு உட்பட்ட பகுதிகளில் 11 ஆயிரத்து 809 குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயனடைவார்கள் என அவர் தெரிவித்தார்.