தமிழக பாஜக சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ – எல்.முருகன் அறிவிப்பு!

 

தமிழக பாஜக சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ – எல்.முருகன் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாஜக சார்பில் விழா நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ – எல்.முருகன் அறிவிப்பு!

இது குறித்து எல்.முருகன், ” பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9, 10ம் தேதி தமிழக பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா நடக்கிறது. 9ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் விழாவில் நான் பங்கேற்கிறேன். 10ம் தேதி மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் விழாவில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பங்கேற்கிறார். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா நடைபெறவிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ – எல்.முருகன் அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய பாஜக அரசு தமிழகத்தில் ஆளும் அரசான பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. வட மாநிலங்களில் பாஜகவின் குரல் ஓங்கியிருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலை தான் நீடிக்கிறது. மொழி திணிப்பு, வேளாண் சட்டம், குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக மக்கள் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால், தமிழக மக்கள் மனதை கவரும் வகையில் பாஜக வேல் யாத்திரை நடத்தியதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். இத்தகைய சூழலில், பொங்கல் விழா நடத்துவதாக பாஜக அறிவித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.