பொங்கல் பண்டிகை : 2 நாள் டாஸ்மாக் வசூல் ரூ.417.18 கோடி!

 

பொங்கல் பண்டிகை : 2 நாள் டாஸ்மாக் வசூல் ரூ.417.18 கோடி!

பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் ரூ.417.18 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டு கிடந்த டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. குறிப்பாக பண்டிகை தினங்களில் மது விற்பனை கணிசமாக உயரும். அந்த வகையில் தீபாவளியையொட்டி டாஸ்மாக்கில் ரூ.466கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகை : 2 நாள் டாஸ்மாக் வசூல் ரூ.417.18 கோடி!

இந்நிலையில் தமிழகத்தில் 2 நாட்களில் ரூ. 417.18 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் போகி பண்டிகை அன்று ரூ.147 கோடிக்கு மது பானங்கள் விற்பனையான நிலையில் நேற்று ரூ.269 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ. 55.27 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.54.47 கோடி, திருச்சி மண்டலத்தில் 56.39 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.50.12 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.50.18 கோடிக்கும் மது விற்பனையாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருவாயானது கடந்த ஆண்டை விட அதிகம் என்று கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகை : 2 நாள் டாஸ்மாக் வசூல் ரூ.417.18 கோடி!

முன்னதாக இந்த மாதம் இன்றும், ஜனவரி 26 மற்றும் 28ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி அந்த 3 நாட்கள் டாஸ்மாக் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.