பொங்கல் 2021 : பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதானாம்!

 

பொங்கல் 2021  : பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதானாம்!

ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக 3 நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

பொங்கல் 2021  : பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதானாம்!

இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக முதல்நாள் சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதில் புதுப்பானையில், அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவிக்கப்படும். இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் தினத்தன்று , விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் மாடுகளை அலங்கரித்து பொங்கல் வைத்து அதற்கு உணவு படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மூன்றாவது நாள் உறவுகளை கண்டு மகிழும் விதமாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் 2021  : பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதானாம்!

பொங்கல் விழா என்றதும் நினைவுக்கு வரும் மற்றொரு நிகழ்ச்சி ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.

பொங்கல் 2021  : பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதானாம்!

இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதே போல் ஜனவரி 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கலும் , 16 ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. தை 1 ஆம் நாள் (ஜனவரி 14) காலை 10.30 – 12 மணி வரை பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரமாக உள்ளது. எமகண்டம் காலை 6 மணி முதல் 7.30 மணி வரையும், ராகு காலம் மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரையும் இருக்கும். இதனால் எமகண்டம், ராகு காலத்தின் போது பொங்கல் வைப்பதை தவிர்க்கலாம்.