பொன்னாரை விட 12 ஆயிரம் வாக்குகள் லீடிங் எடுத்த விஜய் வசந்த்!

 

பொன்னாரை விட 12 ஆயிரம் வாக்குகள் லீடிங் எடுத்த விஜய் வசந்த்!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதோடு சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் மகன் வசந்தும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.

பொன்னாரை விட 12 ஆயிரம் வாக்குகள் லீடிங் எடுத்த விஜய் வசந்த்!

தற்போது தமிழகத்தில் தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக முன்னிலை வகுக்கின்றது. கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார். விஜய் வசந்த் 46 ஆயிரத்து 886 வாக்குகளும் பொன் ராதாகிருஷ்ணன் 34 ஆயிரத்து 250 வாக்குகளும் பெற்றுள்ளனர். 12 ஆயிரத்து 636 வாக்கு வித்தியாசத்தில் விஜய் வசந்த் முன்னிலையில் இருக்கிறார்.