Home தமிழகம் தமிழகத்தில் திட்டமிட்டபடி 2021 சட்டமன்ற தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் திட்டமிட்டபடி 2021 சட்டமன்ற தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

2021 சட்டமன்ற தேர்தல் திட்டமிட்ட படி நடத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து, முறைப்படி சட்டமன்ற தேர்தலை நடத்துவது நல்லது என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது நம் நாட்டிற்கு ஏற்பட்டு உள்ள மிகப்பெரிய சவால் கொரோனா, கொரோனாவை தடுக்க சுய சார்பு இந்தியா திட்டம் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பலன் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின்புதான் தெரிய வரும். டிக் டாக் ஆப்புக்கு தடை செய்த செயல் மகிழ்ச்சி அளிக்கிறது, இதற்கு மாற்றாக தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் புதிய ஆப் ஐ உருவாக்கி உள்ளனர். இளைஞர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது என்பது டிக் டாக் விஷயத்தில் தெரிகிறது.

radhakrishnan
கொரோனா தொற்று யாரும் கணிக்க முடியாத அளவிற்கு சென்று கொண்டு இருக்கிறது, கொரோனா வை ஒழிக்க அடிப்படையான தேவை சுய கட்டுப்பாடு. எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கட்டாயம் தேவை. கொரோனா தொற்றால் அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டியது இல்லை. இதில் அரசியல் செய்யவும் தேவையில்லை. 2021 சட்டமன்ற தேர்தல் திட்டமிட்ட படி நடத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து, முறைப்படி சட்டமன்ற தேர்தலை நடத்துவது நல்லது. தனியார் பள்ளிகளில் 3 கட்டமாக கல்வி கட்டணத்தை வசூல் செய்யலாம் எனக்கூறி இருப்பது மக்களை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Most Popular

போதைப் பொருள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோனிடம் போலீசார் விசாரணை!

மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்...

“ஐ !எனக்கொரு பொம்மை பொறந்திருக்கு” -மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு பிரசவம் -கெடுத்தது யார் ?

ஒரு மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதால், அந்த பெண்ணை கெடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.

76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை

கொரொனா நோய்ப் பரவலைக் கட்டுப்பத்த பல நாடுகளால் முடியவில்லை. இந்தியாவும் அவற்றில் ஒன்று. செப்டம்பர் 26-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின்...

பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடலுக்கு இறுதிச் சடங்கு தொடக்கம்!

மறைந்த பாடகர் எஸ்பிபி அவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்கு தொடங்கியிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் நேற்று...
Do NOT follow this link or you will be banned from the site!