பொள்ளாச்சி வழக்கை தூசி தட்டும் திமுக ; பீதியில் அதிமுக…!

 

பொள்ளாச்சி வழக்கை தூசி தட்டும் திமுக ; பீதியில் அதிமுக…!

பொள்ளாச்சி தொகுதியில் கடந்த 1952ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தலில் அதிமுக 9 முறையும் திமுக மூன்று முறையும் காங்கிரஸ் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போது அந்த தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார் அதிமுகவின் துணை சபாநாயகருமான ஜெயராமன்.

பொள்ளாச்சி வழக்கை தூசி தட்டும் திமுக ; பீதியில் அதிமுக…!

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெயராமன் மீண்டும் இதே தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலிலும் சந்திக்கவுள்ளார் . திமுக சார்பாக டாக்டர் கே . வரதராஜன் ,அமமுக சார்பில் சுகுமார் ,மக்கள் நீதி மையம் சார்பில் சதீஷ்குமார் ,நாம் தமிழர் சார்பில் லோகேஸ்வரி ஆகியோர் பொள்ளாச்சி தொகுதியில் களம் காண்கின்றனர்.

பொள்ளாச்சி வழக்கை தூசி தட்டும் திமுக ; பீதியில் அதிமுக…!

ஆனால் இந்த முறை திமுக பொள்ளாச்சியில் கால் பதிக்கும் என்று அக்கட்சியினர் மிகவும் நம்பிக்கையாக கூறுகின்றனர். காரணம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்லாது பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் பெயரும் அடிபட்டது. இதை கையில் எடுத்துக்கொண்ட திமுக தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து அதிமுக அரசை விமர்சித்து வருகிறது .அத்துடன் இந்த வழக்கு சிபிஐ கைமாறியது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் அதிமுக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ரீதியில் திமுகவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம் தேர்தல் களத்தில் எதிரொலித்தது. அதன்படி பொள்ளாச்சி மண்ணில் அதிமுகவின் தொடர் வெற்றி என்ற சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது திமுக. அங்கு திமுக எம்பி சண்முகசுந்தரம் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இருப்பினும் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் பொள்ளாச்சி விவகாரம் சற்று தணிந்து இருப்பதால் திமுகவில் வரதராஜனை களமிறக்கியது அக்கட்சி தலைமை. வரதராஜன் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் . பொள்ளாச்சியில் கவுண்டர் சமூகமும் , தலித் மக்களும் அதிகம் உள்ளனர். இதனால் பொள்ளாச்சியை கைப்பற்ற திமுக முனைப்பு காட்டி வருகிறது.