“திமுகவை பின்னுக்கு தள்ளும் அதிமுக கூட்டணி”

 

“திமுகவை பின்னுக்கு தள்ளும் அதிமுக கூட்டணி”

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் மட்டுமே தேர்தலுக்கு உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் அதிமுகவை எதிர்கட்சியான திமுக விமர்சித்தும், எதிர்கட்சியான திமுகவை விமர்சித்து ஆளும் கட்சியான அதிமுக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களின் மனநிலையை தெரியப்படுத்தி வருகின்றனர்.

“திமுகவை பின்னுக்கு தள்ளும் அதிமுக கூட்டணி”

அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி டெமாக்ரஸி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி தேர்தலில் முன்னிலை பெறுவதாக தெரியவந்துள்ளது.

“திமுகவை பின்னுக்கு தள்ளும் அதிமுக கூட்டணி”

அதாவது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கொங்கு மண்டலத்தில் வலுவான வலுவாக உள்ளது. அதைப்போல் தொண்டை மண்டலத்தில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளில் அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்க்கின்றன என்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தென் மாவட்டங்களில் திமுக கூட்டணியின் செயல்பாடுகள் வலுவாக உள்ளது. அதேபோல் முக்குலத்தோர் வாக்குகள் அதிமுக – அமமுக களேபரத்தால் திமுகவுக்கு சாதகமாக உள்ளது.

“திமுகவை பின்னுக்கு தள்ளும் அதிமுக கூட்டணி”

அதேபோல் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட புதிய கட்சிகளின் வருகை திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளை பாதிக்கும் என்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அத்துடன் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் வாக்குகள் சில மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.அந்த வகையில் அமமுக கூட்டணி மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இணைந்து 10 சதவீத வாக்குகளைப் பெறலாம் என்றும் இதனால் திமுக , அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

“திமுகவை பின்னுக்கு தள்ளும் அதிமுக கூட்டணி”

பயிர் கடன் தள்ளுபடி ,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம், 100 நாள் வேலை திட்ட ஊதிய உயர்வு உள்ளிட்டவை மற்றும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ,கொரோனா காலத்தில் அதிமுக அரசின் செயல்பாடு போன்றவை இந்த ஆட்சியில் பாராட்டப்படக் கூடியவை ஆக மாறியுள்ளது.திமுகவைப் பொறுத்தவரையில் கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் என்றாலும் கருணாநிதியின் வழியை பின்பற்றுவது, கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் இளம் வாக்காளர்களை குறிவைத்து பிரச்சாரம் மேற்கொள்ளுதல் போன்றவை திமுகவின் உத்தியாக உள்ளது.