“#HBD_ஊழல்_ராணி” இது என்னடா கனிமொழிக்கு வந்த சோதனை

 

“#HBD_ஊழல்_ராணி” இது என்னடா கனிமொழிக்கு வந்த சோதனை

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் #HBD_ஊழல்_ராணி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி. திமுகவின் மகளிரணி செயலாளராக இருக்கும் இவர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று தூத்துக்குடி எம்.பியாக உள்ளார். பொதுவாக ஒரு கூட்டத்திற்கோ, ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கோ சென்றால் அங்குள்ள பெண்களுக்கு மத்தியில் சென்று அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பார் கனிமொழி. இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் அதிகம்.

Image

இந்நிலையில் எம்.பி கனிமொழி இன்று தனது 53 ஆவது பிறந்தநாளை கொண்டுகிறார். எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிவரும் இவர், இன்று காலை வீட்டிலுள்ள் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணங்கிவிட்டு, தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசிப்பெற்றார். அதன்பின் மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இப்படியாக பிறந்தநாள் சென்றுகொண்டிருக்க மதியத்திற்கு பிறகு ட்விட்டரில் #HBD_ஊழல்_ராணி என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்டாக்கி கனிமொழிக்கு மூட் அவுட் கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள். 2ஜி அலைக்கற்றை வழக்கில் தொடர்புடைய புகைப்படங்களை போட்டு ஊழல் ராணி என கிண்டல் செய்துவருகின்றனர். திருட்டின் மொத்த உருவம் கனிமொழி என்று கலாய்த்து வருகின்றனர்.