‘நீங்க விநாயகர் பந்தலுக்குள் போன மாசு ஏற்படும்’ : பெண் எம்எல்ஏ-வை தடுத்து நிறுத்திய கும்பல்!

எம்.எல்.ஏ ஸ்ரீதேவி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பந்தலுக்குள் செல்லக் கூடாது. மீறி சென்றால் மாசு ஏற்பட்டுவிடும்
ஆந்திரா: ஆந்திராவில் பெண் எம்.எல்.ஏ ஒருவர் பட்டியலின சமூகம் என்பதால் விநாயகர் சதுர்த்தி பந்தலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின், ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மருத்துவராகவும் உள்ளவர் எம்.எல்.ஏ உண்டவல்லி ஸ்ரீதேவி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் தலிகொண்டா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
#WATCH Guntur: TDP leaders stop YSRCP MLA Vundavalli Sridevi from entering a Ganesh Pandal in Ananthavaram village, allegedly because she belongs to Dalit community. #AndhraPradesh (02.09.19) pic.twitter.com/X0o1QYg9Px
— ANI (@ANI) September 3, 2019
இந்நிலையில், எம்.எல்.ஏ உண்டவல்லி ஸ்ரீதேவி குண்டூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் அப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். ஆனால் அங்கிருந்த சிலர், எம்.எல்.ஏ ஸ்ரீதேவி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பந்தலுக்குள் செல்லக் கூடாது. மீறி சென்றால் மாசு ஏற்பட்டுவிடும்’ என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும், அங்கிருந்தவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ உண்டவல்லி ஸ்ரீதேவி, முதல்முறையாக நான் சாதிய பாகுபாடுகளை எதிர்கொண்டேன். இது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இப்படியொரு செயலில் ஈடுபட்டனர்’ என்றார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


